/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வீடுகள் விலை அதிகரிப்பு பெங்களூரு மக்கள் தவிப்பு வீடுகள் விலை அதிகரிப்பு பெங்களூரு மக்கள் தவிப்பு
வீடுகள் விலை அதிகரிப்பு பெங்களூரு மக்கள் தவிப்பு
வீடுகள் விலை அதிகரிப்பு பெங்களூரு மக்கள் தவிப்பு
வீடுகள் விலை அதிகரிப்பு பெங்களூரு மக்கள் தவிப்பு
ADDED : ஜூலை 05, 2024 06:13 AM
பெங்களூரு: பெங்களூரில் வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், நகரில் வீடுகள் வாங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம் என பல்வேறு பெயர்களால், பெங்களூரு நகரம் அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தொழில்கள் கொட்டி கிடப்பதால், நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்தோர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வசிக்கின்றனர்.
பலர், குடும்பத்தினருடன் வாடகை வீட்டிலும் வசிக்கின்றனர்.
ஆனால், வீட்டு உரிமையாளர்கள் வாடகை கட்டணத்தை திடீரென உயர்த்துவதால், வாடகைக்கு இருப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வங்கிகளில், 'ஹவுசிங் லோன்' வாங்கி புதிதாக வீடு கட்டலாம் என, பெங்களூரில் வசிப்பவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், பெங்களூரில் புதிய வீடு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதாவது, வீடுகளின் ஒரு சதுர அடி விலை, தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தற்போது வீடுகளில் ஒரு சதுர அடி விலை 9,299 ரூபாயாக உள்ளது. கடந்த 2022ல் ஒரு சதுர அடி விலை 7,396 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, 8,892 ரூபாயாக இருந்தது.
பெங்களூரு நகரை பொறுத்தவரை, குடும்பத்துடன் வசிப்பவர்கள் மூன்று படுக்கை அறை கொண்ட வீடுகளை வாங்குவதற்கு, அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.
இதனால் மூன்று படுக்கை அறை கொண்ட வீடுகளின் தேவை தற்போது 54 சதவீதம் உயர்ந்துள்ளது என, 'மேஜிக் பிரிக்ஸ்' என்ற நிறுவனம் கூறியுள்ளது.
பெங்களூரில் ஒயிட் பீல்டு, சர்ஜாபூர், பல்லாரி ரோடு, கனகபுரா ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில், வீடுகளுக்கு அதிக, 'டிமாண்ட்' இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.