'செல்பி' எடுக்க முற்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்ட பெங்., மென் பொறியாளர்
'செல்பி' எடுக்க முற்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்ட பெங்., மென் பொறியாளர்
'செல்பி' எடுக்க முற்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்ட பெங்., மென் பொறியாளர்
ADDED : ஜூன் 24, 2024 05:13 AM
ஷிவமொகா: அப்பி நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து, அடித்து செல்லப்பட்ட மென் பொறியாளரை தேடி வருகின்றனர்.
பல்லாரியை சேர்ந்தவர் வினோத், 26. இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில், மென்பொறியாளராக பணியாற்றினார். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், 12 நண்பர்களுடன் மதியம் 3:00 மணியளவில் ஷிவமொகா, ஹொசநகரின், யடூர் அருகில் உள்ள அப்பி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தார்.
'சில நாட்களாக மழை பெய்ததால், நீர் வீழ்ச்சியின் பாறைகள் மீது, பாசி படிந்துள்ளது. எனவே சுற்றுலா பயணியர் பாறைகள் மீது ஏற வேண்டாம்' என, ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.
அப்பி நீர்வீழ்ச்சி மிகவும் ஆழமானது. இது எவ்வளவு அடி ஆழம் என்பதை, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அறியாமல் சுற்றுலா பயணியர் நீர்வீழ்ச்சியில் இறங்கி, அபாயத்தில் சிக்குகின்றனர்.
கடந்தாண்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை மனதில் கொண்டு, அப்பி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில், வாகனம் செல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று சுற்றுலா வந்த இளைஞர்கள், வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒன்றரை கி.மீ., நடந்து, அப்பி நீர்வீழ்ச்சியை அடைந்துள்ளனர். வினோத், பாசி படிந்த பாறை மீது ஏறி நின்று, 'செல்பி' எடுக்கும் போது கால் தவறி நீரில் விழுந்து, அடித்து செல்லப்பட்டார்.
தகவலறிந்து வந்த ஹொசநகர் போலீசார், தீயணைப்பு படையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வினோத்தை தேடினர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.