ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்
ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்
ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்
ADDED : ஜூலை 11, 2024 06:35 AM

தாவணகெரே : ''ஹிந்துத்வா குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை, நான் கண்டிக்கிறேன். ஹிந்துக்கள் வன்முறையாளர்கள் என, கூறியது சரியல்ல,'' என, உடுப்பியின் பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சுவாமிகள் அரசியல் பேசக்கூடாது என்பது சரியல்ல. மடாதிபதிகளும் கூட ஓட்டுப் போடுகின்றனர். என்னை பொறுத்தவரை அவர்கள் அரசியல் பேசுவது தவறு அல்ல.
ஹிந்துத்வா குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை நான் கண்டிக்கிறேன். 'ஹிந்துக்கள் பகைமை கொள்வர், வன்முறையாளர்கள்' என, கூறியுள்ளார். அப்படி என்றால் நமக்கு நீதிமன்றங்கள் தேவையில்லையா? பொறுப்பான பதவியில் இருப்பவர், இது போன்று பேசக்கூடாது. இது உணர்வுகளை துாண்டும் பேச்சாகும்.
வேறு யாராவது பேசியிருந்தால், நடவடிக்கை எடுத்திருப்பர். ஆனால் ராகுல் பேசியதால், நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு சமுதாயங்களுக்கு இடையே, விஷ விதையை விதைக்கக் கூடாது. மணிப்பூரில் நடந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.
இவ்வாறு அவர்கூறினார்.