எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஸ்டிக்கர் ஒட்டி வெளிநாட்டு பொருட்கள் விற்றவர் கைது
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஸ்டிக்கர் ஒட்டி வெளிநாட்டு பொருட்கள் விற்றவர் கைது
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஸ்டிக்கர் ஒட்டி வெளிநாட்டு பொருட்கள் விற்றவர் கைது
ADDED : ஜூலை 11, 2024 06:36 AM

பெங்களூரு : எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனும் இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் ஸ்டிக்கரை ஒட்டி, வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சுதாம நகரில் உள்ள கிட்டங்கியில் வெளிநாட்டு பொருட்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, பொருளாதார குற்ற தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு கிட்டங்கியில், அவர்கள் சோதனை நடத்தினர். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டு பிஸ்கட்டுகள், சாக்லேட், குளிர்பானங்கள் உள்ளிட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தானை சேர்ந்த நரேந்திர சிங், 45 என்பவர் கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு கப்பல்களில் வரும், உணவப்பொருட்களை அங்கு வேலை செய்யும் சிலரின் உதவியுடன், குறைந்த விலைக்கு நரேந்திர சிங் வாங்கி வந்துள்ளார்.
இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் ஸ்டிக்கரை, உணவுப்பொருட்கள் மீது ஒட்டி கடைகள், மால்களில் அதிக விலைக்கு விற்றதுதெரிந்தது.
10.7.2024 / சுப்பிரமணியன்
11_DMR_0015
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள்
படம்: நரேந்திர சிங்