ADDED : ஜூலை 18, 2024 11:43 PM

சமாஜ்வாதி கட்சி 2022 உத்தர பிரதேச
சட்டசபை தேர்தலில் 111 இடங்களை வென்றது. நமக்கு பா.ஜ.,வின் 100 அதிருப்தி
எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கிடைத்தால் எளிதாக ஆட்சி அமைக்கலாம். நான்
மழைக்கால சலுகையை அறிவிக்கிறேன். 100 எம்.எல்.ஏ.,க்களுடன் வாருங்கள்; ஆட்சி
அமையுங்கள்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
மோடிக்கு எதிரான வன்முறை!
பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். அந்த கட்சியின் எம்.பி., ராகுல், இந்த விஷயத்தில் பக்குவமாக செயல்பட வேண்டும்; கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும்.
சுதான்ஷு திரிவேதி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
வாரிசு என்பதில் வெட்கமில்லை!
நான் வாரிசு முறையில் வந்தவன் தான். அதை நினைத்து வெட்கப்படவில்லை. ராம் விலாஸ் பஸ்வானின் மகன் என்பதில் பெருமையடைகிறேன். அதே சமயம் நான் நல்லது செய்தால், அதற்கு பெற்றோரே காரணம் என்பர். கெட்டது செய்தால், என்னை வசைபாடுவர். வாரிசு அரசியல் என்பது இருமுனை கத்தி.
சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி