விதான் சவுதா அடமானம் முதல்வர் மீது அசோக் பாய்ச்சல்
விதான் சவுதா அடமானம் முதல்வர் மீது அசோக் பாய்ச்சல்
விதான் சவுதா அடமானம் முதல்வர் மீது அசோக் பாய்ச்சல்
ADDED : ஜூன் 17, 2024 04:21 AM

பெங்களூரு, : ''சித்தராமையா அவுட் கோயிங் முதல்வர். விதான் சவுதாவை அடமானம் வைக்கிறார்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டினார்.
பெங்களூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக மக்களுக்கு, அரசு துர்பாக்கியங்களை அளித்துள்ளது. விலை உயர்வு மூலம், ஏழைகளுக்கு பலத்த அடி கொடுத்துள்ளனர். பா.ஜ., ஆட்சி காலத்தில், சிறிய அளவில் விலை உயர்த்தியதால், சித்தராமையா பெரிதாக போராட்டம் நடத்தினார். இப்போது அவரது அரசு செய்வது என்ன?
பால், பழங்கள், காய்கறிகள், பெட்ரோல், டீசல் என, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்களால் காபி, டீ கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அசோக்குக்கு அறிவில்லை என, முதல்வர் கூறினார்; அவருக்கு அறிவு இருக்கிறதா.
விலையை உயர்த்தினாலும், அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார், எம்.எல்.ஏ.,க்களை எச்சரித்துள்ளார். இதை கவனித்தால், காங்கிரஸ் அரசு நீண்ட நாட்கள் இருக்காது என, தோன்றுகிறது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலில், மக்கள் பாடம் புகட்டுவர். காங்கிரசுக்கு மக்கள் 'சொம்பு' கொடுப்பது உறுதி.
சித்தராமையா 15 முறை பட்ஜெட் தாக்கல் செய்தும், மாநிலத்தின் பொருளாதாரத்தை பாழாக்கியுள்ளார். பி.டி.ஏ.,வை விற்பதற்கு அரசு முற்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், வார்டு அலுவலகங்களை அடமானம் வைக்கின்றனர். சித்தராமையா அவுட் கோயிங் முதல்வர். விதான் சவுதாவையும் அடமானம் வைக்க முற்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.