அசாதுதீன் ஓவைசி வீட்டில் கருப்பு மை வீசியதால் பரபரப்பு
அசாதுதீன் ஓவைசி வீட்டில் கருப்பு மை வீசியதால் பரபரப்பு
அசாதுதீன் ஓவைசி வீட்டில் கருப்பு மை வீசியதால் பரபரப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:37 PM

புதுடில்லி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் அசாதுதீன் ஓவைசி.
சமீபத்தில், லோக்சபா எம்.பி.,யாக பார்லிமென்டில் இவர் பதவியேற்றபோது, 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கமிட்டார்.
இந்நிலையில், டில்லியின் அசோகா சாலையில் உள்ள அவரது வீட்டின் முகப்பில், மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு கருப்பு மை வீசி சென்றனர்.
இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுஉள்ளதாவது:
என் டில்லி வீட்டின் முகப்பில், மர்ம நபர்கள் சிலர் கருப்பு மை வீசி சென்றுள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்கள், என் வீட்டை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வால், நான் அச்சமடையவில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்காமல், டில்லி போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.