மாநில பொறுப்பாளர் பா.ஜ.,வில் நியமனம்
மாநில பொறுப்பாளர் பா.ஜ.,வில் நியமனம்
மாநில பொறுப்பாளர் பா.ஜ.,வில் நியமனம்
ADDED : ஜூலை 26, 2024 08:49 PM
புதுடில்லி:பா.ஜ., மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..
ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராக, ராஜ்யசபா எம்.பி.,யும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான ராதா மோகன் தாஸ் அகர்வால், அசாம் மாநில பொறுப்பாளராக முன்னாள் எம்.பி., ஹரிஷ் திவேதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, ராஜஸ்தான் மாநிலத்தைக் கவனித்த அரவிந்த் மேனன், தேசிய செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
மகளிர் அணி முன்னாள் தலைவி விஜயா ரஹத்கர் தேசிய இணைப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பீஹார் மாநில தலைவராக, துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு பதிலாக, அமைச்சர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ராஜஸ்தான் மாநில தலைவராக, சி.பி. ஜோஷிக்கு பதிலாக ராஜ்யசபா எம்.பி., மதன் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான நட்டா பிறப்பித்துள்ளார்.