* மருமகள் கொலை கணவன் குடும்பத்துக்கு தலா 10 ஆண்டு சிறை
* மருமகள் கொலை கணவன் குடும்பத்துக்கு தலா 10 ஆண்டு சிறை
* மருமகள் கொலை கணவன் குடும்பத்துக்கு தலா 10 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 26, 2024 08:45 PM
மஹாராஜ்கஞ்ச்:உத்தர பிரதேசத்தில், வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, மருமகளை கொலை செய்த கணவர், மாமனார் மற்றும் மாமியாருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டம் நிச்லால் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் யாதவ், 23. இவருக்கும், சுமன், 19 என்பவருக்கும், 2021ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மறுநாளில் இருந்தே மனோஜ் யாதவ், அவரின் தாய் சுபாவதி தேவி, 58 மற்றும் தந்தை பதர் யாதவ், 60 ஆகியோர், கூடுதல் வரதட்சணை சுமனை சித்திரவதை செய்துள்ளனர்.
இந்நிலையில், தலையில் பலத்த காயத்துடன் சுமன் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்றோருடன் சேர்ந்து தன் மனைவியை மனோஜ் குமார் யாதவ் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மூவரையும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த மஹாராஜ்கஞ்ச் மாவட்ட நீதிபதி பதர் யாதவ், சுபாவதி தேவி மற்றும் மனோஜ் யாதவ் ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதையடுத்து, மூவரும் மஹராஜ்கஞ்ச் சிறையில் அடைக்கப்பட்டனர்.