அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நியமனம்
அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நியமனம்
அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நியமனம்
ADDED : ஜூலை 20, 2024 12:29 AM

புதுடில்லி : அமெரிக்காவிற்கான இந்திய துாதராக இருந்த தரண்ஜித் சந்து, கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், அப்பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில் அந்த பதவிக்கு, வெளியுறவு செயலராக இருந்து கடந்த 14ம் தேதி ஓய்வு பெற்ற வினய் குவாத்ராவை, மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்திய வெளியுறவு பணியில், 1988ம் ஆண்டு இணைந்த வினய் குவாத்ராவின் பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது.
எனினும், அவரது பதவிக்காலத்தை அக்டோபர் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. துாதரக பணியில் நீண்ட அனுபவம் பெற்றுள்ள இவர், சீனா, நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஆகியவற்றின் துாதரக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வினய் குவாத்ரா அமெரிக்கா துாதராக நியமிக்கப்பட்டுள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.