50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த அம்பானி தம்பதி
50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த அம்பானி தம்பதி
50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த அம்பானி தம்பதி
ADDED : ஜூலை 03, 2024 01:43 AM

மும்பை, மஹாராஷ்டிராவில் 50 ஏழை ஜோடிகளுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி தம்பதி நேற்று இலவச திருமணம் செய்து வைத்தனர்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் - ராதிகாவுக்கு வரும் 12ம் தேதி மஹாராஷ்டிராவின் மும்பையில் திருமணம் நடக்கஉள்ளது.
இதையொட்டி, மஹாராஷ்டிராவை சேர்ந்த 50 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று முகேஷ் அம்பானி - நீட்டா தம்பதி தலைமையில் நடந்தது.
தாலி, மண மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள், வெள்ளியில் மெட்டி மற்றும் கொலுசு ஆகியவை மணமகளுக்கு வழங்கப்பட்டன.
மணமகனுக்கு 1.01 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. திருமண சீர்வரிசையாக ஓராண்டுக்கான வீட்டு உபயோக பொருட்கள் தரப்பட்டன.