போட்டியிட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களும் தோல்வி
போட்டியிட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களும் தோல்வி
போட்டியிட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களும் தோல்வி
ADDED : ஜூன் 06, 2024 02:59 AM
திருவனந்தபுரம்:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் காங்., கம்யூ., பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தது கேரள அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்., கூட்டணி கைப்பற்றியது. ஒன்றில் இடதுசாரியும் மற்றொன்றில் பா.ஜ.,வும் வெற்றி பெற்றது. கேரளாவில் முதன்முறையாக பா.ஜ., தனது கணக்கை தொடங்கியுள்ளது.
20 தொகுதிகளில் மொத்தம் ஒன்பது பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அனைவருமே தோல்வியை தழுவியுள்ளனர்.
வயநாட்டில் காங்., வேட்பாளர் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூ., தேசிய தலைவர் ஆனிராஜா 3.64 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
வடகரையில் போட்டியிட்ட மா.கம்யூ., வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய அம்மாநில எம்.எல்.ஏ. யுமான ஷைலஜா ஒரு லட்சத்துக்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
ஆலத்தூரில் சிட்டிங் எம்.பி.,யாக போட்டியிட்ட காங்., வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ், எர்ணாகுளத்தில் மா.கம்யூ. ஷைன், பா.ஜ. கூட்டணி வேட்பாளர்கள் ஷோபா சுரேந்திரன் ஆலப்புழாவிலும், நிவேதிதா சுப்ரமணியன் பொன்னானியிலும், அஸ்வினி காசர்கோட்டிலும், சங்கீதா விஸ்வநாதன் இடுக்கியிலும், சரசு ஆலத்தூரிலும் தோல்வியை தழுவினர்.
போட்டியிட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களும் தோல்வியை தழுவியது அம்மாநில அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.