ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்து போட்டி
ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்து போட்டி
ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்து போட்டி
ADDED : ஜூலை 19, 2024 01:16 AM
சண்டிகர்: ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது.
மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தற்போதே வேலைகளில் இறங்கிவிட்டன.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் இண்டியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி, ஹரியானா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது:
ஹரியானா மக்கள் பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் வாய்ப்பு வழங்கினர். ஆனால், இரு கட்சிகளும் மாறி மாறி கொள்ளையடித்தன. இதனால் மாநிலத்தில் வளர்ச்சி என்பதே இல்லை.
இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். முதல்வர் மனோகர் லால் கட்டாரை மாற்றி, நயாப் சிங் சைனியை நியமித்து மக்களை முட்டாளாக்கி விட்டதாக பா.ஜ., நினைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.