தாறுமாறாக கார் ஓட்டியதை தட்டி கேட்ட வாலிபர் கொலை
தாறுமாறாக கார் ஓட்டியதை தட்டி கேட்ட வாலிபர் கொலை
தாறுமாறாக கார் ஓட்டியதை தட்டி கேட்ட வாலிபர் கொலை
ADDED : ஜூன் 16, 2024 10:55 PM

ஹொஸ்கோட்: காரை தாறுமாறாக ஓட்டி சென்றதை தட்டி கேட்ட வாலிபர் ஆயுதங்களால் தாக்கி, கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் அருகே கங்காபுரா கிராமத்தில் வசித்தவர் நவீன் நாயக், 27. இவர், ஆட்டோவில் காய்கறிகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை, பெங்களூரு- -- கோலார் நெடுஞ்சாலையில், நவீன் நாயக் ஓட்டி சென்ற ஆட்டோவை முந்தி, ஒரு கார் வேகமாக தாறுமாறாக சென்றது.
ஒரு கட்டத்தில் காரை முந்தி சென்ற நவீன் நாயக், காரை மறித்தார். தாறுமாறாக கார் ஓட்டுவது பற்றி கேட்டார். இதனால் காரில் இருந்த நான்கு பேருக்கும், நவீன் நாயக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது; கைகலப்பாக மாறியது.
ஆத்திரமடைந்த நான்கு பேரும், காரில் இருந்த ஆயுதங்களை எடுத்து, நவீன் நாயக்கை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். ஹொஸ்கோட் போலீசார், விசாரிக்கின்றனர்.