Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நடுரோட்டில் கட்டிப்புரண்ட போலீஸ் ஏட்டு - நடத்துனர்

நடுரோட்டில் கட்டிப்புரண்ட போலீஸ் ஏட்டு - நடத்துனர்

நடுரோட்டில் கட்டிப்புரண்ட போலீஸ் ஏட்டு - நடத்துனர்

நடுரோட்டில் கட்டிப்புரண்ட போலீஸ் ஏட்டு - நடத்துனர்

ADDED : ஜூன் 01, 2024 01:35 AM


Google News
சாம்ராஜ்நகர், கர்நாடகாவில் போலீஸ் ஏட்டும், அரசு பஸ் நடத்துனரும் நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரின் ஹிமவத் கோபாலசுவாமி மலையில் இருந்து, குண்டுலுபேட்டுக்கு நேற்று காலை கர்நாடகா அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சில் மைசூரைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு கோட்ரேஷ் ஐனால் பயணித்தார். இவர், சீருடை அணிந்திருந்தார்.

இவர், ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தார். நடத்துனர் லோகேஷ் கவனக்குறைவால், இரண்டாவது முறை ஏட்டுக்கு டிக்கெட் கொடுத்தார். இது குறித்து ஏட்டு கேள்வி எழுப்பினார்.

இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. குண்டுலுபேட் பஸ் நிலையத்துக்கு வந்த பின், இது கைகலப்பாக மாறியது.

பஸ் நிலையத்திலேயே ஏட்டும், நடத்துனரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அங்கிருந்தவர்கள், இருவரையும் விலக்கி விட்டனர்.

குண்டுலுபேட் போலீஸ் நிலையத்தில், இருவரும் பரஸ்பரம் புகார் அளித்தனர். ஏட்டையும், நடத்துனரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருவரும் அடித்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அரசு பணியாளர்களான இவர்கள், பொது இடத்தில் சண்டை போட்டதை பலரும் கண்டித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us