விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு
ADDED : ஜூன் 18, 2024 06:22 AM

பெங்களூரு : கர்நாடகா மாநிலஙம் பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு, மதுரஸ் பால் என்பவர், ஜூன் 9ம் தேதி ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் பயணித்தார். அவருக்கு நுாடுல்ஸ் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிடும்போது, வாயில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. அதை வெளியே எடுத்து பார்த்த போது, இரும்பு துண்டு இருந்தது.
ஏர் - இந்தியா நிறுவனத்திற்கு புகார் அளித்திருந்தார்.விசாரணை நடத்திய நிறுவனம், 'எங்கள் உணவகங்களில் பயன்படுத்தப்படும் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து இந்த பிளேடு விழுந்துள்ளது தெரியவந்தது. இனி, கடினமான காய்கறிகளை வெட்டிய பின், அனைத்தும் சோதனை செய்யப்படும். உணவு சப்ளை செய்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்' என, தெரிவித்துள்ளது.