மாணவர்களுக்கு ஆச்சரியமூட்டும் நவீன கலைக்கான 'தேசிய கேலரி'
மாணவர்களுக்கு ஆச்சரியமூட்டும் நவீன கலைக்கான 'தேசிய கேலரி'
மாணவர்களுக்கு ஆச்சரியமூட்டும் நவீன கலைக்கான 'தேசிய கேலரி'
ADDED : ஜூன் 29, 2024 11:15 PM

பெங்களூரு அரண்மனை சாலையில், நவீன கலைக்கான 'தேசிய கேலரி' எனும் அருங்காட்சியகம் 3.5 ஏக்கரில் அமைந்துள்ளது. 2009ல் திறக்கப்பட்டது.
மத்திய கலாசார துறை நேரடியாக நிர்வகிக்கிறது. டில்லி, மும்பைக்கு அடுத்து மூன்றாவதாக பெங்களூரில் இருக்கிறது.
இந்த கேலரி, நாட்டின் கலாசார நெறிமுறைகளின் களஞ்சியமாக உள்ளது. 18ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இந்திய கலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமான ஓவியங்கள், சிற்பங்கள், கிராபிக் காகிதங்கள் மற்றும் இந்தியாவில் நவீன கலையின் வரலாற்று வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஆரம்ப கால புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
சுதந்திரத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்து படங்களும் உள்ளன.
தஞ்சாவூர் உட்பட பல வகையான ஓவியங்கள்; சிற்பங்கள்; மரச்சாமான்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.
இந்த கேலரி வளாகம் அற்புதமான மரங்கள், நீரூற்றுகள், கண்ணாடி குளத்துடன் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இங்கு ஒரு அரங்கம், பொது நுாலகம், விற்பனை கூடம், சிற்றுண்டி அரங்கு என அனைத்து வசதிகளும் உள்ளன.
பள்ளி, கல்லுாரி ஆராய்ச்சி மாணவர்களுக்கான முக்கியமான அருங்காட்சியகம்; ஆண்டுதோறும் கலை, கலாசாரம் குறித்த கருத்தரங்குகள் நடக்கும்; ஆவண படங்கள் திரையிடப்படும்.
திங்கட்கிழமை தோறும் விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
கூடுதல் தகவலுக்கு, https://ngmaindia.gov.in/ngma_bangaluru.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்
- நமது நிருபர் -.