பர்னிச்சர் கடையில் தீ; ரூ.10 லட்சம் பொருள் நாசம்
பர்னிச்சர் கடையில் தீ; ரூ.10 லட்சம் பொருள் நாசம்
பர்னிச்சர் கடையில் தீ; ரூ.10 லட்சம் பொருள் நாசம்
ADDED : ஜூலை 19, 2024 05:40 AM
பையப்பனஹள்ளி : பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
பெங்களூரு பையப்பனஹள்ளி அருகே விஞ்ஞான நகரில் வசிப்பவர் சிவராஜ். பர்னிச்சர் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 11:30 மணிக்கு பர்னிச்சர் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், பர்னிச்சர் கடையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் கடைக்குள் இருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்துள்ளது.