நாயை மடியில் வைத்து கார் ஓட்டிய பாதிரியார் மீது வழக்கு
நாயை மடியில் வைத்து கார் ஓட்டிய பாதிரியார் மீது வழக்கு
நாயை மடியில் வைத்து கார் ஓட்டிய பாதிரியார் மீது வழக்கு
ADDED : ஜூன் 11, 2024 06:14 PM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பைஜு வின்சென்ட், 50. ஆலப்புழா அருகே நுாரநாடு கத்தோலிக்க சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். சில நாட்களுக்கு முன், நாயை மடியில் வைத்துக்கொண்டு இவர் கார் ஓட்டினார். அந்த வீடியோவை அவரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
இதையடுத்து நேரில் விளக்கம் அளிக்கும்படி, ஆலப்புழா வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி நேற்று முன்தினம் ஆலப்புழா வட்டார போக்குவரத்து அதிகாரி ரமணன் முன்னிலையில் ஆஜரான பாதிரியார், நாயை மடியில் வைத்த படி, கார் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அந்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.