பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜூலை 28, 2024 04:29 PM

பெங்களூரு: வெளி மாநில இளம் பெண்களை, பலவந்தமாக விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு, தலா எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரின் ஆர்.டி.நகரில் வசிப்பவர்கள் ஷேக் ரியாஜுதீன், 35, மற்றும் தேவதாஸ், 35. இவர்கள் ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களுக்கு, வேலை ஆசை காண்பித்து பெங்களூரு அழைத்து வந்தனர். லைவ் பேண்டில் வேலை கிடைக்கும் என, நம்ப வைத்தனர்.
ஆனால் ஆர்.டி.நகரில் வீட்டில் அடைத்து வைத்தனர். பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். சில மாதங்களுக்கு முன், போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி, இளம்பெண்களை மீட்டனர். இவர்களை விபச்சாரத்தில் தள்ளிய ஷேக் ரியாஜுதீன், தேவதாசை கைது செய்தனர்.
பெங்களூரின், 71வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் தலா எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி பாலசந்திர பட் தீர்ப்பளித்தார்.