4 மாடி கட்டடம் இடிந்து விபத்து மஹாராஷ்டிராவில் மூவர் பலி
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து மஹாராஷ்டிராவில் மூவர் பலி
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து மஹாராஷ்டிராவில் மூவர் பலி
ADDED : ஜூலை 27, 2024 11:47 PM

மும்பை,: மஹாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில், நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் நான்கு மாடி கட்டடம் ஒன்று இருந்தது. பத்தாண்டுகள் பழமையான இந்த கட்டடத்தில் 13 வீடுகள் மற்றும் மூன்று கடைகள் இருந்தன. நேற்று அதிகாலை இந்த கட்டடத்தில் திடீரென பலத்த சத்தத்துடன் விரிசல் விழுந்தது. இது பற்றி, அந்த பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவித்தனர்.
அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று கட்டடத்தில் வசித்து வந்த 13 குழந்தைகள் உட்பட 52 பேரை பத்திரமாக மீட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடிகளில் சிக்கித் தவித்த சிலரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து நடந்த மீட்புப் பணியின் போது, அடுத்தடுத்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் முகமது மிராஸ் அல்தாப் உசேன், 30, மிராஸ் சயிப் அன்சாரி, 24, சபீக் அஹ்மது ரஹ்மத் அலி அன்சாரி, 28; என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடக்கிறது. கட்டட விபத்துக்கான காரணம் குறித்து நவி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.