பயங்கரவாதிகள் தாக்குதல் 4 வீரர்கள் பலி
பயங்கரவாதிகள் தாக்குதல் 4 வீரர்கள் பலி
பயங்கரவாதிகள் தாக்குதல் 4 வீரர்கள் பலி
ADDED : ஜூலை 09, 2024 01:32 AM
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் பாத்நோட்டா கிராமம் அருகே நேற்று ராணுவ வீரர்கள் வழக்கம்போல் வாகனத்தில் ரோந்து பணிக்காக சென்றனர்.
அப்போது திடீரென அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனத்தை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கியால் சுடத்துவங்கினர்.
இதற்கு ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மோதல் நீடித்து வரும் நிலையில், அப்பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.