பெங்களூரில் 2 வது விமான நிலையம் முதல்வருடன் ஆலோசித்து முடிவு
பெங்களூரில் 2 வது விமான நிலையம் முதல்வருடன் ஆலோசித்து முடிவு
பெங்களூரில் 2 வது விமான நிலையம் முதல்வருடன் ஆலோசித்து முடிவு
ADDED : ஜூலை 08, 2024 06:45 AM

பெங்களூரு: ''பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை. எங்கு அமைப்பது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, 150 கி.மீ., தொலைவில் வேறு எந்த விமான நிலையமும் கட்டக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்த ஒப்பந்தம், 2033 வரை அமலில் இருக்கும்.
உடனடியாக பணிகள் துவங்கினால், அடுத்த ஒன்பது ஆண்டுகளில் புதிய விமான நிலையம் சாத்தியமாகும். முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
பெங்களூரு தெற்கு, கனகபுரா பகுதியை சேர்ந்தவர்கள் புதிய விமான நிலையம் கட்ட, அழுத்தம் கொடுக்கின்றனர். நிலம் அடையாளம் காணப்பட்ட பின், அதை கையகப்படுத்துதல், இழப்பீடு போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மும்பையில் இரு விமான நிலையங்களுக்கு இடையே 36 கி.மீ., துாரம் மட்டுமே உள்ளது. அதுபோன்று நியூயார்க் மற்றும் லண்டனிலும் இரண்டு விமான நிலையங்களில் குறைந்த தொலைவிலேயே அமைந்து உள்ளன.
கர்நாடகாவில், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தவுடன், தமிழக அரசு, ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக சாதக, பாகதங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.