17ல் பக்ரீத் பண்டிகை 2,500 ஆடுகள் விற்பனை
17ல் பக்ரீத் பண்டிகை 2,500 ஆடுகள் விற்பனை
17ல் பக்ரீத் பண்டிகை 2,500 ஆடுகள் விற்பனை
ADDED : ஜூன் 14, 2024 07:43 AM
சீனிவாசப்பூர்: சீனிவாசப்பூரின் வளகேரனஹள்ளி என்ற இடத்தில் நேற்று ஆடுகள் சந்தை நடந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் விற்கப்பட்டன.
கோலார் மாவட்ட விவசாயிகள், விவசாயத்துடன் கால்நடைகளை வளர்ப்பதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மாதம் தோறும் சீனிவாசப்பூர் வளகேரன ஹள்ளி என்ற இடத்தில் விற்பனை செய்ய ஆடுகள் சந்தை நடத்தப்படுவது வழக்கம்.
இந்த சந்தையில் கோலார், பெங்களூரு ரூரல், துமகூரு, சிந்தாமணி, சிக்கபல்லாப்பூர், தமிழகத்தின் ஓசூர், கிருஷ்ணகிரி, ஆந்திராவின் நெல்லுார், அனந்தபூர், மதனபள்ளி உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் விற்பனைக்காக பலவிதமான வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் கொண்டு வரப்படுகின்றன.
இம்மாதம் 17ல் பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள், நேற்றைய சந்தையில் விற்பனைக்கு வந்தன. நேற்றைய சந்தையில் 2,500 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.