நீட் தேர்வில் வழங்கிய கருணை மதிப்பெண் ரத்து 1,563 பேருக்கு வரும் 23ல் மறுதேர்வு
நீட் தேர்வில் வழங்கிய கருணை மதிப்பெண் ரத்து 1,563 பேருக்கு வரும் 23ல் மறுதேர்வு
நீட் தேர்வில் வழங்கிய கருணை மதிப்பெண் ரத்து 1,563 பேருக்கு வரும் 23ல் மறுதேர்வு
ADDED : ஜூன் 14, 2024 02:32 AM

புதுடில்லி,
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது தொடர்பான வழக்கில், 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுகிறது. மறுதேர்வு எழுதும் வாய்ப்பு தரப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வின்போது, வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால், தேர்வை நடத்தும், என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை மறுத்தது.
சந்தேகம்
இந்நிலையில், கடந்த 4ம் தேதி நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது. இதில், நாடு முழுதும், 67 மாணவர்கள், 720க்கு 720 என, முழு மதிப்பெண் பெற்றனர். இதைத் தவிர, சில மாணவர்கள், 719 மற்றும் 718 மதிப்பெண்ணும் பெற்றனர்.
குறிப்பிட்ட ஆறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியவில்லை.
ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, என்.சி.இ.ஆர்.டி.,யின் முந்தைய பாடத் திட்டத்தில் விடை எழுதுவதா, புதிய பாடத்திட்டத்தில் விடை எழுதுவதா என்ற சந்தேகத்தால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடிய வில்லை என, கூறப்பட்டது.
இதையடுத்து, இந்தத் தேர்வு மையங்களில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, இழந்த நேரத்துக்காக, கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது.
இதனால்தான், 720க்கு 720 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி அமைப்புகள் கவலை தெரிவித்தன. இது அரசியல் ரீதியிலும் பிரச்னையை உருவாக்கியது.
நீட் நுழைவுத் தேர்வில் மோசடி நடந்துள்ளதாகவும், அதனால், இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கட்சிகள் வலியுறுத்தின. தமிழகத்தில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்நிலையில், கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களில், 1,563 பேர் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
கேள்வித்தாள் கசியவில்லை என்றும், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும், என்.டி.ஏ., மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய, உச்ச நீதிமன்ற கோடைக்கால விடுமுறை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.டி.ஏ., மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனு அகர்வால், தன் வாதத்தின்போது கூறியுள்ளதாவது:
மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுகிறது.
கருணை மதிப்பெண் அல்லாத அவர்களுடைய மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்படும். இந்த மாணவர்கள் விரும்பினால், மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுதேர்வு நடக்கும்
இதைத் தொடர்ந்து அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஏற்கனவே தெரிவித்தபடி, ஜூலை 6 முதல், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைமுறைகளை நடத்தலாம். இந்த வழக்கின் முடிவுக்கு அது கட்டுப்பட்டது. மத்திய அரசு பரிந்துரைத்துள்ளபடி, 1,563 மாணவர்களுக்கான கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுகிறது.
கருணை மதிப்பெண் இல்லாத அவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலை மத்திய அரசு வெளியிடும்.
விருப்பப்படும் மாணவர்களுக்கு, வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதில் பங்கேற்க விருப்பமில்லாத மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் அல்லாத மதிப்பெண் வழங்கப்படும். மறு தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, அதில் கிடைக்கும் மதிப்பெண்வழங்கப்படும்.
மறு தேர்வு முடிவு, 30ம் தேதி வெளியிடப்படும். அதன்படி, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங்