ஏரிகளை மேம்படுத்த ரூ.100 கோடி விடுவிப்பு
ஏரிகளை மேம்படுத்த ரூ.100 கோடி விடுவிப்பு
ஏரிகளை மேம்படுத்த ரூ.100 கோடி விடுவிப்பு
ADDED : ஜூன் 12, 2024 12:15 AM

பெங்களூரு : 'ஏரிகளை மேம்படுத்த அரசு 100 கோடி ரூபாய் விடுவித்து உள்ளது,'' என சிறிய நீர்ப்பாசன அமைச்சர் போசராஜு கூறினார்.
பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள தனது அலுவலகத்தில், சிறிய நீர்பாசன துறை அமைச்சர் போசராஜு நேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், மாநிலத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. 223 தாலுகாக்கள், வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு பருவமழை, நல்ல முறையில் பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் உள்ள ஏரிகளின் நீர்தேக்க திறனை அதிகரிக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், நமது துறைக்கு, அரசிடம் இருந்து உத்தரவு வந்து உள்ளது.
ஏரிகளை மேம்படுத்த, அரசு 100 கோடி ரூபாய், விடுவித்து உள்ளது. இந்த பணத்தில் முதற்கட்டமாக 93 ஏரிகளை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும். ஏரிகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவது, கால்நடைகள் தாகத்தை தீர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, திட்ட அறிக்கையை அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.