சிறுமியை கடத்தி பலாத்காரம் டிரைவருக்கு '10 ஆண்டு'
சிறுமியை கடத்தி பலாத்காரம் டிரைவருக்கு '10 ஆண்டு'
சிறுமியை கடத்தி பலாத்காரம் டிரைவருக்கு '10 ஆண்டு'
ADDED : ஜூலை 27, 2024 05:20 AM
தாவணகெரே, : சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
தாவணகெரே, சன்னகிரி அன்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின், 24; ஆட்டோ டிரைவர். இவருக்கும், 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி சிறுமியை, சச்சின் சிக்கமகளூருக்கு கடத்தி சென்றார்.
அங்கு ஒரு தனியார் விடுதியில் வைத்து பலாத்காரம் செய்தார். 'இது குறித்து வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று சிறுமியிடம், சச்சின் கூறி உள்ளார்.
ஆனாலும் சிறுமி, பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சச்சின் மீது சன்னகிரி போலீசில் புகார் செய்தனர். 'போக்சோ' வழக்குப்பதிவு செய்த போலீசார், சச்சினை கைது செய்தனர்.
அவர் மீது தாவணகெரே 1வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி ஸ்ரீராம் நாராயண் ஹெக்டே தீர்ப்பு கூறினார். சச்சினுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.