செல்வ பெருந்தகை சொன்ன பொய் அம்பலம்
செல்வ பெருந்தகை சொன்ன பொய் அம்பலம்
செல்வ பெருந்தகை சொன்ன பொய் அம்பலம்
ADDED : ஆக 02, 2024 09:18 PM

வயநாடு: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் மீட்பு பணிகளை பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாடு சென்ற மத்திய அமைச்சர் குரியன் கூறினார். இதன் மூலம் வயநாடு பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என செல்வ பெருந்தகை கூறியது பொய் என அம்பலமாகியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல் மலை ஆகிய இரு இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 295 பேர் பலியாயினர். மீட்பு பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து கேட்டறிந்து வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கிட உறுதி அளித்துள்ளது என்றார்.
முன்னதாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட சென்று பார்க்கவில்லை என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஜார்க் குரியன் கடந்த ஜூலை 30-ம் தேதி சென்ற செய்தி வெளியாகியுள்ளது.இதன் மூலம் செல்வ பெருந்தகை கூறியது பொய் என நிரூபனமாகியுள்ளது.