காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் துப்பாக்கிச்சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் துப்பாக்கிச்சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் துப்பாக்கிச்சண்டை
ADDED : ஆக 06, 2024 07:52 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டம் பாசந்த்கார்க் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புடையினர் சுற்றிவளைத்தனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கிச்சூடு நீடித்து வருகிறது.