அயோத்தி கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ., தோல்விக்கு காரணம்?: அகிலேஷ் விளக்கம்
அயோத்தி கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ., தோல்விக்கு காரணம்?: அகிலேஷ் விளக்கம்
அயோத்தி கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ., தோல்விக்கு காரணம்?: அகிலேஷ் விளக்கம்
UPDATED : ஜூன் 06, 2024 01:01 PM
ADDED : ஜூன் 06, 2024 12:53 PM

லக்னோ: 'அயோத்தியில் ஏழைகளின் நிலத்தை பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக பா.ஜ.,வினர் பறித்தார்கள். இதனால் அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதி மக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்துள்ளார்கள்' என அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உ.பி.,யில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பா.ஜ.,வுக்கு பலமான ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் பா.ஜ., இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்த அயோத்தி மக்களுக்கு நன்றி. அயோத்தியில் ஏழைகளின் நிலத்தை பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக பா.ஜ.,வினர் பறித்தார்கள். அவர்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
அநீதி
ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. சந்தை விலைக்கு இணையாக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. புனிதமான காரியத்திற்காக ஏழைகளை அழித்தார்கள். இதனால் தான் அயோத்தி மற்றும் பல தொகுதிகளில் உள்ள மக்கள் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர் என நினைக்கிறேன். பா.ஜ., வினர் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இடங்களை வெல்ல முடியாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
மகிழ்ச்சி
உத்தரபிரதேசத்தில் பல தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை மக்கள் வேண்டுமென்றே தோற்கடித்தனர். நாங்கள் மக்களுக்காக வேலை செய்தோம். இந்த முறை எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படாது. மக்கள் பிரச்னைக்காகத் தான் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மை இல்லை என்றால், ஆட்சி அமைக்க பலரை மகிழ்விக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.