
வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: ருக்மணி பாபு
இந்த சமூக அக்கறைக்கு என்ன காரணம் பாபு?
உடைச்ச "திருஷ்டி" பூசணிக்காய் வழுக்கி, 2019ம் ஆண்டுல என் மகன் சந்திச்ச விபத்து; தாடையில காயம், கை எலும்பு முறிஞ்சு போச்சு; அப்போ இருந்து இந்த அறிவுரையை சொல்லிட்டு இருக்குறேன்!
"முரட்டு தோற்றம்" - கை கொடுத்திருக்கா?
எங்கே... கலை நிகழ்ச்சிக்காக இலங்கை விமான நிலையத்துல இறங்கினதும் சந்தேகப்பட்டாங்க! இரவுநேர வாகன சோதனையில "மிமிக்ரி" பண்ணி என்னை நிரூபிக்க வேண்டியிருக்கு! இயக்குனர் பாலா பட வாய்ப்பு நழுவிருச்சு!
"சினிமா"ன்னா அவ்வளவு இஷ்டமா?
"நடிகன்" ஆகுற கனவுல சென்னைக்கு வந்த நான் அம்மா கூப்பிட்டதும் உடனே திரும்பிட்டேன். என் கனவை புரிஞ்சுக்கிட்ட அம்மா மறுபடியும் சென்னைக்கு அனுப்பி வைச்சாங்க! "அம்மா"ன்னா அவ்வளவு இஷ்டம்... அதனாலதான், நான் "ருக்மணி" பாபு!
உங்க பலவீனம்?
எல்லாரையும் நம்பிடுவேன். "படம் பாதியில நிற்குது"ன்னு சொன்னவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துட்டு, "நம்மளால நல்லது நடக்கப் போகுது"ன்னு நம்பியிருக்கேன்! நடிச்சு கொடுத்த படத்துக்கு ஊதியம் தராதப்போ கை பிசைஞ்சு நின்னுருக்கேன்!
உங்க திறமையை உரசிப் பார்த்த அனுபவம்?
கோவை பேருந்து நிலையத்துல உடல்நலமில்லா மனிதனா நடிச்சிருக்கேன்; பரிதாபப்பட்ட ஒருத்தர் எனக்கு தர்மம் பண்ணினார்; "கலைத்திறமைக்கான வெகுமதி"ன்னு அவர் தந்த ரூபாயை ப்ரேம் போட்டு இன்னும் வைச்சிருக்கேன்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!