
பிளாஷ்பேக் : ஒரேநாளில் மோதி வெற்றி பெற்ற 3 ஹீரோக்கள்
"உழவன் மகன்" படத்தை ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கினார். மனோஜ் கியான் இசை அமைத்தார். ராதிகா, நம்பியார், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்தனர். இது விஜயகாந்தின் சொந்தப் படம். எம்ஜிஆரே படத்தைப் பாராட்டியுள்ளார். விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"மனிதன்" படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ், சோ, வினுசக்கரவர்த்தி என பலர் நடித்துள்ளனர். ரூபினி இந்த படத்தில்தான் அறிமுகமானார். ரகுவரனின் வில்லன் நடிப்பு பேசப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த மாஸ் படம் "நாயகன்". சரண்யா, ஜனகராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.
"உழவன் மகன்" கிராம புறங்களிலும், நாயகன் நகர்புறங்களிலும், மனிதன் அனைத்து ஏரியாவிலும் கலெக்ஷனை அள்ளியது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!