
முற்றும் மோதலால் சரிவு
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நேற்று இறக்கத்துடன் நிறைவு செய்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் திரும்பியதால், நேற்று வர்த்தகம் துவங்கியபோதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. எனினும், இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தீவிரம்அடைந்து வருவதன் எதிரொலியாக, சந்தை குறியீடுகள் சிறிது நேரத்தில் சரிவு பாதைக்கு திரும்பின.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்; ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடு சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
1இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம், மோதல் தீவிரமடைந்து வருவது
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
டி.சி.எஸ்., 1.72
உயர்வு கண்ட பங்குகள் -- நிப்டி (%)
இண்டஸ்இண்ட் பேங்க் 4.69
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 891 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 1.35 சதவீதம் குறைந்து, 75.42 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா சரிந்து, 86.43 ரூபாயாக இருந்தது.