Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

ADDED : ஜூன் 18, 2025 12:44 AM


Google News
Latest Tamil News

முதலீட்டாளர்களின் முன்னெச்சரிக்கை


இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நேற்று இறக்கத்துடன் நிறைவு செய்தன. இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேற்றம், ஆசிய பங்குச் சந்தைகளின் பாதகமான நிலை தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.

தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி தொடர்பான முடிவுகள் ஆகியவற்றை முன்னிட்டு, முன்னெச்சரிக்கையுடன் சந்தையை அணுகிய முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், நேற்று சந்தை நாள் முழுதும் இறக்கத்துடன் வர்த்தகமானது.

உலக சந்தைகள்


திங்களன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி குறியீடுகள் உயர்வுடனும்; ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.

சரிவுக்கு காரணங்கள்


1அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறி வருவது

2இஸ்ரேல் - ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வது

3முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று லாபத்தை முதலீட்டாளர்கள் பதிவு செய்தது.

சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)


அதானி என்டர்பிரைசஸ் 2.31

எட்டர்னல் 2.06

டாக்டர்.ரெட்டீஸ் 2.00

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 1,483 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 1.69 சதவீதம் அதிகரித்து, 74.47 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா சரிந்து, 86.23 ரூபாயாக இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us