
நேற்று, சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் கணிசமான உயர்வுடன் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக, மூன்று வர்த்தக நாட்கள் சந்தை கண்ட சரிவுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமெரிக்கா - --சீனா இடையே வர்த்தகப் பதற்றம் தணிந்ததால், உலகளாவிய சந்தை போக்குகள் உயர்வுடன் துவங்கின. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்கு சந்தையில் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளின் வளர்ச்சி குறித்த கணிப்புகள், ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பில், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 349.78 புள்ளிகள் வரை உயர்வு கண்டு, முடிவில் சற்று குறைந்து 260.74 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடுகள் உயர்வுடன் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்
உயர்வு கண்ட பங்குகள்
எட்டர்னல் 3.21%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,076 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.38 சதவீதம் அதிகரித்து, 65.92 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா சரிந்து, 85.87 ரூபாயாக இருந்தது.