
தொடர்கிறது சரிவு
தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக பங்குச்சந்தைகள் நேற்றும் சரிவுடன் நிறைவடைந்தன. நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் வரை சரிந்தன. கலவையான உலக சந்தை நிலவரங்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட அன்னிய செலாவணி சந்தை ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் ஈட்டினர். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மட்டும் அதிகம் விற்கப்படவில்லை. சந்தையில் நேற்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அனைத்துமே சரிவு கண்டன.
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடுகள் உயர்வுடனும்; ஜப்பானின் நிக்கி சரிவுடனும் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிந்தன.
சரிவுக்கு காரணங்கள்
1 மீண்டும் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,854 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.28 சதவீதம் அதிகரித்து, 64.81 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து,