Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

ADDED : ஜன 11, 2024 01:29 AM


Google News
Latest Tamil News

சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 71,386.21நேற்றைய முடிவு: 71,657.71மாற்றம்: 271.50 ஏற்றம் பச்சை



நிப்டி

முந்தைய முடிவு: 21,544.85நேற்றைய முடிவு: 21,618.70மாற்றம்: 73.85 ஏற்றம் பச்சை



காத்திருக்கும் வர்த்தகர்கள்


 நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், 'சென்செக்ஸ், நிப்டி' ஆகியவை துவக்கத்தில் சரிவை கண்டன. அதன் பின், வர்த்தகர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கவும், சந்தை மீட்சியை கண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்தது
 சந்தை முடியும் நிலையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க்' உள்ளிட்ட பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதை அடுத்து, சந்தை உயர்வை கண்டது
 உலகச் சந்தையில் சரிவுகள் தொடர்வதை அடுத்து, உள்நாட்டு சந்தைகளிலும் அதன் பாதிப்புகள் பிரதிபலித்தன வர்த்தகர்கள் எந்த திசையில் பயணிப்பது என்பது குறித்து முடிவெடுக்க, சில செய்திகளுக்காக காத்திருப்பது தெளிவாக தெரிகிறது
 குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணவீக்கம் குறித்த தரவுகள் வர இருப்பதால், அதை அறிந்து அதற்கேற்ப செயல்படும் எண்ணம் வர்த்தகர்களிடம் அதிகம் காணப்படுகிறது
 வர்த்தகர்கள் வாகனம், மூலதன பொருட்கள், சிமென்ட் ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துவதையும் சந்தையில் காண முடிந்தது
 இதற்கிடையே, கடந்த செவ்வாய் அன்று அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருக்கும் செய்திகள் தெரிய வந்ததும், அது, வர்த்தகர்களை சற்று சோர்வடையச் செய்வதாக இருந்தது
 துறைகளை கவனிக்கும்போது நேற்று ஆரோக்கியம், தகவல் தொழில்நுட்பம், உலோகம் ஆகிய துறைகள் 0.4 சதவீத உயர்வை கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு 0.5 சதவீத சரிவைக் கண்டன
 மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சிறிய அளவிலான ஏற்றத்துடன் முடிவடைந்தன நேற்றைய வர்த்தகத்தை பொறுத்தமட்டில் மும்பை பங்குச் சந்தையில், 400க்கும் மேற்பட்ட பங்குகள் அதன் 52 வார உச்சத்தை தொட்டன
 மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 3,935 நிறுவன பங்குகள் வர்த்தகம் ஆன நிலையில், 2,094 நிறுவன பங்குகள் லாபத்தில் முடிந்தன. 1,741 பங்குகள் சரிவை கண்டன; 100 பங்குகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.



ஏற்றம் கண்ட பங்குகள்


 சிப்லா  அதானி என்டர்பிரைசஸ்  ரிலையன்ஸ்  ஹெச்.சி.எல்., டெக் அதானி போர்ட்ஸ்



இறக்கம் கண்ட பங்குகள்

 ஓ.என்.ஜி.சி.,  டிவிஸ் லேப்ஸ் என்.டி.பி.சி.,  பி.பி.சி.எல்., பவர் கிரிட் கார்ப்பரேஷன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us