சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்/பங்கு சந்தை நிலவரம்
ADDED : ஜன 02, 2024 11:37 PM
* ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பிரச்னை பெரிதாகி வருகிறது. அவர்களுடைய மூன்று பங்குகளை அமெரிக்க கடற்படை தாக்கி அழித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான், செங்கடல் பகுதிக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. இதனால் என்ன பாதிப்பு நேருமோ என்ற அச்சம் ஆசிய நாடுகளின் சந்தைகளில் எதிரொலித்தது* டிசம்பர் மாதத்தில், சீனாவிலும் ஆஸ்திரேலியாவிலும் உற்பத்தியாளர் குறியீடுகள் சரிந்து போயின. அங்கே தொழிலக உற்பத்தி குறைந்துள்ளது என்றே இதற்கு அர்த்தம். இந்த காரணங்களால் நம் சந்தைகளும் பின்னடைவைச் சந்தித்தன * மூன்றாம் காலாண்டு முடிவுகள் விரைவில் வெளிவரப் போகின்றன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் ஈட்டியிருக்க வாய்ப்பில்லை என்ற அனுமானத்தில், வர்த்தகர்கள் 'பிராபிட் புக்கிங்' செய்துகொள்ளத் துவங்கினர்* ஜனவரி முதல் தேதியன்று அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், நம் நாட்டுப் பங்குகளை 855 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளனர்* படிப்படியாக, கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலை அளித்தது.* கனரக வாகன ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் கவனத்தைப் பெற்றது. இதுநாள் வரை, வாகனத்தில் மோதிவிட்டு, தப்பியோடினால், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.* புதிய விதிகளின்படி, இதுபோன்ற 'ஹிட் அண்டு ரன்' வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். இந்த திருத்தத்தை எதிர்த்து, வாகன ஓட்டுனர்கள் போராடுகின்றனர். இதனால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்பது வர்த்தகர்களின் கவலை சந்தை முடிவுற்ற போது, மருந்துத் துறை பங்குகள் நன்கு உயர்ந்து இருந்தன. வாகனங்கள், மனை வணிகம், மூலதனப் பொருட்கள், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப பங்குகள் சரிவைக் கண்டன.
கோல் இந்தியா அதானி போர்ட்ஸ் சன் பார்மா டிவிஸ் லேப்ஸ் சிப்லா
ஐச்சர் மோட்டார்ஸ் எம் அண்டு எம்., அல்ட்ராடெக் சிமென்ட் எல் அண்டு டி., கோட்டக் மஹீந்திரா வங்கி