/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/எஸ்.பி.ஐ., சுற்றுச்சூழல் டிபாசிட் திட்டம்எஸ்.பி.ஐ., சுற்றுச்சூழல் டிபாசிட் திட்டம்
எஸ்.பி.ஐ., சுற்றுச்சூழல் டிபாசிட் திட்டம்
எஸ்.பி.ஐ., சுற்றுச்சூழல் டிபாசிட் திட்டம்
எஸ்.பி.ஐ., சுற்றுச்சூழல் டிபாசிட் திட்டம்
ADDED : ஜன 13, 2024 12:18 AM

மும்பை:சுற்றுச் சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியளிக்கும் நோக்கத்துடன், 'கிரீன் ருபி டேர்ம் டிபாசிட்' திட்டத்தை, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட அனைத்து தனிநபர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். முதலீட்டாளர்கள், 1,111 நாட்கள், 1,777 நாட்கள் மற்றும் 2,222 நாட்கள் ஆகிய மூன்று வெவ்வேறு தவணைகளை தேர்வு செய்வதற்கான வசதி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, இந்த திட்டம் வங்கியின் கிளைகள் வாயிலாக கிடைக்கிறது என்றும், இது விரைவில், 'யோனோ' மற்றும் 'ஆன்லைன் பேங்கிங்' போன்ற டிஜிட்டல் சேனல்கள் வாயிலாகவும் கிடைக்கும் என்றும் எஸ்.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.