ADDED : பிப் 06, 2024 10:37 AM

ராஷி பெரிபெரல்ஸ்
கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ராஷி பெரிபெரல்ஸ்' நிறுவனம், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பொருட்களை, 'டெல், ஏசஸ், எச்.பி., லெனோவோ' போன்ற உலகளாவிய பிராண்டுகளுக்கு வழங்குகிறது. அத்துடன் தொழில்நுட்ப ஆதரவு, முன் விற்பனை, சந்தைப்படுத்தல் சேவைகள், கடன் தீர்வுகள் மற்றும் உத்தரவாத மேலாண்மை சேவைகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் வழங்குகிறது.
நிதி நிலவரம்:
கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 9,469 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 123 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 07.02.24
முடியும் நாள் : 09.02.24
பட்டியலிடும் நாள் : 14.02.24
பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., - என்.எஸ்.இ.,
பங்கு விலை : ரூ.295 - 311
பங்கின் முகமதிப்பு : ரூ.5
மொத்த பங்கு விற்பனை : ரூ.600 கோடி