/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உச்சம் தொட்ட 'அதானி'உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உச்சம் தொட்ட 'அதானி'
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உச்சம் தொட்ட 'அதானி'
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உச்சம் தொட்ட 'அதானி'
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உச்சம் தொட்ட 'அதானி'
ADDED : ஜன 04, 2024 12:28 AM

புதுடில்லி:“அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி'யிடமிருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை; எனவே, விசாரணையை செபியே தொடரும்,” என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, நேற்று பங்குச் சந்தையில் 'அதானி' குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் பங்குகளும் விலையேற்றம் கண்டன.
நேற்று வர்த்தக நேர இறுதியில், குழுமத்தின் சந்தை மதிப்பு 63,703 கோடி ரூபாய் உயர்ந்து, 15.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வர்த்தகத்தினிடையே சந்தை மதிப்பு அதிகபட்சமாக 1.18 லட்சம் கோடி உயர்ந்து, 15.62 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.