/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ கணிப்புகள் பொய்யாகக்கூடிய வாய்ப்புள்ள வாரம் இது கணிப்புகள் பொய்யாகக்கூடிய வாய்ப்புள்ள வாரம் இது
கணிப்புகள் பொய்யாகக்கூடிய வாய்ப்புள்ள வாரம் இது
கணிப்புகள் பொய்யாகக்கூடிய வாய்ப்புள்ள வாரம் இது
கணிப்புகள் பொய்யாகக்கூடிய வாய்ப்புள்ள வாரம் இது
ADDED : ஜூலை 21, 2024 02:43 AM

நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாதம் 3.36 சதவீதம் என்ற 16 மாத உச்சத்தை எட்டியது. உணவுப் பொருட்கள், குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது
பன்னாட்டு நிதியம், நடப்பு நிதியாண்டில் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை, 7 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு முன், கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.80 சதவீதம் என கணித்திருந்தது.
மேலும், 2025 - 26ம் நிதியாண்டு வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றமின்றி, 6.50 சதவீதமாகவே அறிவித்து உள்ளது
கடந்த ஜூன் மாதத்தில், புதிதாக 40 லட்சம் மியூச்சுவல் பண்டு கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நடப்பாண்டு புதிதாக துவங்கப்பட்டு உள்ள மியூச்சுவல் பண்டு கணக்கு களின் எண்ணிக்கை, இரண்டு கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு முழுதுமே மொத்தம் 1.80 கோடி கணக்குகள் தான் துவங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டின் சரக்கு ஏற்றுமதி, கடந்த ஜூன் மாதத்தில் 2.56 சதவீதம் அதிகரித்து, 2.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பொறியியல் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், காபி, கரிம மற்றும் கனிம ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பு, இதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளது.
வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வங்கிகள் வழங்கிய கடன் அளவின் வளர்ச்சி, வங்கிகளில் உள்ள வைப்பு நிதி கண்ட வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
வீடுகள் விற்பனை நிலவரம், எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தி உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, புதிய வீடுகள் விற்பனை, நீடித்து உழைக்கக்கூடிய பொருட்கள் உற்பத்திக்கான ஆர்டர்கள், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், தனிநபர் வருமானம் மற்றும் செலவினம் போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று, 84 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 26 புள்ளிகள் ஏற்றம்; வியாழனன்று 187 புள்ளிகள் ஏற்றம்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 269 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் - திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் - 28 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
வரும் வாரத்தில் முக்கிய நிகழ்வுகளாக, நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பல நிறுவனங்களின் 2024- - 25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளும் வெளிவர இருக்கின்றன. இவை தவிர, செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் பங்களிப்பும், நிப்டியின் நகர்வை தீர்மானிப்பதாக இருக்கும். பட்ஜெட் போன்ற முக்கிய நிகழ்வுகள் இருக்கும் சூழலில், சந்தையின் நகர்வை கணிப்பது என்பது, வர்த்தகர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கும் எனலாம்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின்படி பார்த்தால், நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதைப் போன்ற நிலையே தென்படுகிறது.
வரும் வாரத்தில் மத்திய பட்ஜெட் போன்ற முக்கிய நிகழ்வுகள் இருப்பதால், டெக்னிக்கல் அனாலிசிஸ் கோட்பாடுகளின் அடிப்படையிலான சந்தை குறித்த கணிப்புகள் பொய்யாகப் போய்விடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன என்பதை வர்த்தகர்கள் நினைவில் வைத்து செயல்படுவது, மிகமிக அவசியமான ஒன்று.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 24405, 24280 மற்றும் 24146 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24756, 24980 மற்றும் 25114 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24630 என்ற அளவிற்கு மேலே சென்று, தொடர்ந்து வர்த்தகமாகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.