ADDED : மார் 12, 2025 01:14 AM

700 கோடி ரூபாயை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக, 'ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவில் துணிகர மூலதனம், கடந்த 2024ல் வலுவாக உயர்ந்து உள்ளது. இது, 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 43 சதவீத அதிகரிப்பு என, 'பெய்ன் அண்டு கம்பெனி இந்தியா'வின் அறிக்கை தெரிவிக்கிறது.
1.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜி.எஸ்.டி., ஏய்ப்பு, நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் நடந்துள்ளதை, 25,397 வழக்குகள் வாயிலாக, மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். ஐந்து ஆண்டுகளில், கண்டறியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 86,711; தொகை 6.79 லட்சம் கோடி ரூபாய்.
1,61,150 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நடப்பாண்டு ஜனவரி 31ம் தேதி வரையிலான நிலவரப்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இவற்றில், மஹாராஷ்டிராவில் 28,511; கர்நாடகாவில் 16,954 நிறுவனங்கள் உள்ளன.