ரூ.96,000 கோடி முதலீடு என்.டி.பி.சி., ஒப்பந்தம்
ரூ.96,000 கோடி முதலீடு என்.டி.பி.சி., ஒப்பந்தம்
ரூ.96,000 கோடி முதலீடு என்.டி.பி.சி., ஒப்பந்தம்
ADDED : மார் 12, 2025 01:03 AM

சத்தீஸ்கரில் அணுமின் நிலையம் உள்பட, பல்வேறு தூய எரிசக்தி திட்டங்களில் 96,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய, என்.டி.பி.சி., திட்டமிட்டு உள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டில், பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., மற்றும் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி நிறுவனம், சத்தீஸ்கர் மாநில அரசுடன், 96,000 கோடி மதிப்பிலான பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இதில், 80,000 கோடி ரூபாய் முதலீட்டில், 4,200 மெகாவாட் அணு மின் நிலையம் அமைப்பது, சிகாசர் என்னுமிடத்தில் 5,876 கோடி ரூபாய் முதலீட்டில் உந்தப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டம், 10,000 கோடி ரூபாய் முதலீட்டில், 2 ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆகியவை அடங்கும்.