/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பிளைவுட்டுக்கு தரச்சான்று கட்டாயம் பிளைவுட்டுக்கு தரச்சான்று கட்டாயம்
பிளைவுட்டுக்கு தரச்சான்று கட்டாயம்
பிளைவுட்டுக்கு தரச்சான்று கட்டாயம்
பிளைவுட்டுக்கு தரச்சான்று கட்டாயம்
ADDED : ஜூன் 08, 2024 01:07 AM

புதுடில்லி:பிளைவுட்டின் தரம் மற்றும் நீடித்த உழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து பிளைவுட்டுகளுக்கும், அடுத்தாண்டு முதல், இந்திய தர நிர்ணய நிறுவனம் வழங்கும் பி.எஸ்.ஐ., தரச்சான்றிதழை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தோனேசியா, மலேஷியா, வியட்நாம் மற்றும் நேபாளத்தில் இருந்து தரம் குறைந்த பிளைவுட்டுகள் இறக்குமதியை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது.
இந்தியாவின் பிளைவுட் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 2019ல் 712.39 கோடி ரூபாயில் இருந்து, 2024ம் நிதியாண்டில் 1,283 கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, இம்முடிவை அரசு எடுக்கிறது.
அரசின் இந்நடவடிக்கை யால், அடுத்தாண்டு பிளைவுட்டுகளின் விலை 15 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என, பிளைவுட் உற்பத்தியாளர் சங்க தலைவர் நரேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.