/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய 'என்விடியா' ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய 'என்விடியா'
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய 'என்விடியா'
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய 'என்விடியா'
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய 'என்விடியா'
ADDED : ஜூன் 07, 2024 02:47 AM

புதுடில்லி:'ஆப்பிள்' நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாகி உள்ளது, 'என்விடியா' எனும் 'சிப்' தயாரிப்பு நிறுவனம்.
அமெரிக்காவைச் சேர்ந்த என்விடியா நிறுவனம், பல ஆண்டு களாக 'கேமிங் சிப்' தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவில் இந்நிறுவனத்தின் சிப்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் மோகமும் அதிகரித்துஉள்ளது.
'மைக்ரோசப்ட், மெட்டா, கூகுள்' நிறுவனங்கள், தங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மேம்படுத்துவதில் மும்முரமாக இருக்கின்றன. அதனால் என்விடியா நிறுவனத்தின் சிப் தேவை மிக அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக, நடப்பாண்டில் மட்டும், நிறுவனத்தின் பங்கு விலை 147 சதவீதம் அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி என்விடியா நிறுவன பங்கு ஒன்றின் விலை, கிட்டத்தட்ட 1.02 லட்சம் ரூபாய். கடந்த இரு வாரங்களில் மட்டும் பங்கு விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மற்றொரு புறம், 'ஐபோன்' விற்பனை சரிவால் ஆப்பிள் நிறுவனம் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர். அதாவது கிட்டத்தட்ட 250 லட்சம் கோடி ரூபாய்.
என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது, 3 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சற்று தாண்டியுள்ளதால், இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 3.14 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.