/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது? முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது?
முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது?
முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது?
முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது?

வாங்கும் சக்தி:
பணவீக்கம் என்பது காலப்போக்கில் பொருட்களின் விலை உயர்வை குறிக்கிறது. இது வாங்கும் சக்தியை பாதிக்கிறது. உதாரணமாக பணவீக்கம் 5 சதவீதம் என்றால், இப்போது 100 ரூபாய்க்கு வாங்கும் பொருள், 105 ரூபாயாக இருக்கும் என பொருள். எனவே, முதலீட்டின் பலனும் இந்த அளவிற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
முதலீடு தாக்கம்:
பணவீக்கம் வாங்கும் சக்தியை பாதிப்பதால், முதலீடு அளிக்கும் பலன் பணவீக்கத்தை விட அதிகமாகஇருக்க வேண்டும் என கருதப்படுகிறது. ஏனெனில், பணவீக்கம் 5 சதவீதமாக இருந்து முதலீடு அளிக்கும் பலன்,அதற்கும் குறைவாக இருந்தால், முதலீட்டின் பலன் எதிர்மறையாக இருக்கும்.
வைப்பு நிதி:
பரவலாக நாடப்படும் வைப்பு நிதி முதலீடு கொண்டு பணவீக்கத்தின் தாக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். பொதுவாக வைப்பு நிதி வட்டி விகிதம், 6 முதல் 7 சதவீதமாக அமையலாம். பணவீக்க விகிதத்தை கழித்துப்பார்த்தால், உண்மையான முதலீடு பலன் 1 சதவீதமாக இருக்கலாம். வரி தாக்கம் இதை இன்னும் பாதிக்கும்.
பங்குகள் பலன்:
பொதுவாக பங்குச்சந்தை முதலீடு இடர் மிக்கது என்றாலும், அவை அளிக்கும் பலன் நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை வெல்லக்கூடியதாக கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட் முதலீடும் பணவீக்கத்தை மிஞ்சக்கூடியதாக தங்கமும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அளிக்கிறது.
பரவலாக்கம்:
முதலீடுகள் பணவீக்கத்தை மிஞ்சும் பலன் அளிக்க வேண்டும் என்றாலும், அவற்றின் இடர்