ADDED : செப் 01, 2025 11:08 PM

க டந்த ஆகஸ்ட் மாதத்தில், விற்பனைக்காக வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை, முந்தைய மாதத்தைவிட குறைந்ததாக மாருதி சுசூகி, ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
ஜி.எஸ்.டி., வரி அடுக்குகள் நான்கில் இருந்து இரண்டாக குறையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், வாகனங்களின் வரி குறையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, வாகனம் வாங்குவதை பலரும் தள்ளிப் போட்டதால், மாதத்தின் பிற்பகுதியில் வாகன விற்பனை குறைந்தது. எனவே, மாருதி சுசூகி நிறுவன வாகன வினியோகம், 8 சதவீதம் சரிவு கண்டது.