'இந்தியாவில் யு.ஏ.இ., நிறுவனங்கள் முதலீடு'
'இந்தியாவில் யு.ஏ.இ., நிறுவனங்கள் முதலீடு'
'இந்தியாவில் யு.ஏ.இ., நிறுவனங்கள் முதலீடு'
ADDED : செப் 21, 2025 12:34 AM

துபாய்:இந்தியாவின் உள்கட்டமைப்பு, வங்கிகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தளவாடத் துறைகளில் முதலீடு செய்ய, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பியுஷ் கோயல், இந்தியா - யு.ஏ.இ., உயர்நிலை முதலீட்டு பணிக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதில், பாரத் மார்ட், நட்பு மருத்துவமனை போன்ற முக்கிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இரு நாடுகள் இடையே முதலீட்டு சூழலை மேம்படுத்தல், சந்தை அணுகல் உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டன.
பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது:
இரு நாடுகளும் தங்களது இலக்குகளை மீண்டும் நிர்ணயம் செய்து, பல்வேறு துறைகளில் விரைவாக முதலீட்டை அதிகரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் கட்டுதல், சில்லரை மற்றும் மருந்து தயாரிப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், வங்கித் துறை மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் உள்ளது. இந்தியாவின் தளவாடத்துறை, பசுமை எரிசக்தி துறைகளிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பாரத் மார்ட் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும்.
இந்தியாவின் முதல் 5- - 6 முதலீட்டாளர்களில் ஒன்றாக யு.ஏ.இ., உள்ளது