பென்ஷன் திட்டத்தில் புதிய சீர்திருத்தம்
பென்ஷன் திட்டத்தில் புதிய சீர்திருத்தம்
பென்ஷன் திட்டத்தில் புதிய சீர்திருத்தம்
ADDED : செப் 21, 2025 09:29 PM

தேசிய பென்ஷன் திட்டத்தில் உறுப்பினர்கள் 15 ஆண்டுகள் ஆனதும் விலகிக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையிலான அம்சம் உள்ளிட்ட மாற்றங்களை கொண்ட வரைவு திட்டத்தை, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டு உள்ளது.
தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., உறுப்பினர்கள் தற்போது 60 வயதான பிறகே இதிலிருந்து விலகிக் கொள்ள முடியும். விலகும் போது, 60 சதவீத தொகையை விலக்கிக் கொள்ளலாம். எஞ்சிய தொகை ஆண்டளிப்பு திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், தனியார் உறுப்பினர்கள் 15 ஆண்டுகள் ஆன பிறகு விலகிக்கொள்ள வழி செய்யும் அம்சத்தை, வரைவு திட்டத்தில் பென்ஷன் ஆணையம் உத்தேசித்துள்ளது. மேலும், 80 சதவீத தொகையை விலக்கிக் கொள்ள வழி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் 15ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
இதனிடையே, வேறு சில முக்கிய மாற்றங்களையும் பென்ஷன் ஆணையம் அண்மையில் அறிவித்துள்ளது. ஆணையம் அறிமுகம் செய்துள்ள பல திட்டங்கள் வரைவின் கீழ், தனியார் உறுப்பினர்கள் தங்கள் தொகை அனைத்தையும் சம பங்கு சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.